காரைக்கால்: கயிலாசநாதர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமான் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கயிலாசநாதர் கோவிலில், நேற்று முன்தினம் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகனுக்கு பல்வேறு மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், விபூதி காப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.