புதுச்சேரி: வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவில் 86வது செடல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி, நாளை 24ம் தேதி வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடக்கிறது. முக்கிய விழாவான செடல் உற்சவம் 25ம் தேதி மதியம் 1:௦௦ மணிக்கும், மாலை 4:30 மணிக்கு ரத மகோற்சவமும் நடக்கிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கின்றனர். 27ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.