பந்தலூர் : ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கொளப்பள்ளி, அம்பலமூலா முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில் காலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 10:00 மணிக்கு அன்னபூஜை நடந்தது. அதனையடுத்து பக்தர்கள் பூஜைகள் செய்தபின்னர் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. பூஜைகள் அர்ச்சகர் பரமசிவம் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
*அம்பலமூலா குன்றத்து குமரன் கோவிலிலும் ஆடிகிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், முருகனுக்கு அன்னபூஜையும் நடந்தது. * ஊட்டி அருகே எம்.பாலாடா ஆனந்தமலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழுஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.