பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
12:07
திருச்சி: ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டப்பத்தில், பக்தர்கள் குளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி ஆடி அமாவாசையும் ஆகஸ்ட், 3ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவும் வருகிறது. இதை, காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டபம் காவிரியாற்றில், பக்தர்கள் புனித நீராட வசதியில்லாமல் அவதிப்படுவதை தடுக்கும் பொருட்டு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில், இரண்டு போர்வெல்கள் போடப்பட்டு, குழாய் மூலம் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அம்மா மண்டபம் படித்துறையில், ஆடிப்பெருக்கு விழாவின் போது, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் மற்றும் உடை மாற்றும் அறை போன்ற வசதிகளும் செய்யப்படுகிறது.