Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கிளி வாகனத்தில் விருத்தாம்பிகை வீதியுலா! கிளி வாகனத்தில் விருத்தாம்பிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஜூலை 26ல் ஆடி அமாவாசை தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
10:07

சதுரகிரிமலை : சதுரகிரி கோவில்களில், ஜூலை 26ம் தேதி, ஆடி அமாவாசை பூஜை நடைபெற உள்ளது. விழாவிற்கான, முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மதுரை மாவட்டம், சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதியில், சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன; இக்கோவில்களை, இந்து சமய அறநிலையத் துறையினர் நிர்வகிக்கின்றனர். இங்கு, ஆடி அமாவாசை தரிசனம் சிறப்பு வாய்ந்தது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் சுப்பிரமணியன், மலைப்பாதையில் ஆய்வு செய்தார். மலையில், குடிநீர், தங்கும் கூடாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பக்தர்கள், நேற்று முதல் மலையேற துவங்குவர். ஜூலை 26ல், அமாவாசையை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் ராஜஅலங்காரத்தில் அருள்பாலிப்பார். அன்று அதிகாலை, 5:00 மணி முதல், காலை 6:30 மணி வரை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின், எஸ்.பி., விஜயேந்திரபிதரி, ’தினமலர்’ நிருபரிடம் கூறியதாவது: ஜூலை 24 முதல் ஜூலை 27 வரை, மலைப்பாதையில், கூடுதல் எஸ்.பி., மற்றும் ஆறு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அடிவாரம், வழுக்குப்பாறை, சதுரகிரிமலை என, மூன்று இடங்களில், மருத்துவ முகாம், தீயணைப்பு முகாம் அமைக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar