ஆடிப்பூரம்: மேல்மருவத்துாரில் ஜூலை 30 உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2014 12:07
காஞ்சிபுரம்: மேல்மருவத்துாரில் உள்ள சித்தர் பீடத்தில் நடைபெறவுள்ள ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, நாளை மறுநாள், உள்ளூர் விடுமுறையாக அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்துார் நகரில் உள்ள சித்தர் பீடத்தில், ஆடிப்பூரம் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் (ஜூலை 30) ஆடிப்பூரம் விழா மேல்மருவத்துாரில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதும் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக, ஆகஸ்ட் 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.