பதிவு செய்த நாள்
28
ஜூலை
2014
12:07
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா, ஆக., 2 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடக்கிறது. 13 நாட்கள் திருவிழாவில் நாள்தோறும் இரவு அனுமார், சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக., 8 ல் திருக்கல்யாணம், ஆக., 10 ல் தேரோட்டம், ஆக., 12 ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவமும் நடக்கிறது. ஆக., 5 துவங்கி ஆக., 12 வரை எட்டு நாட்கள் மாட்டுத்தாவணி நடக்கிறது. திருவிழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.