சின்னசேலம்: சின்னசேலம் ஆர்ய வைசிய சமூகத்தினர் சார்பில் கருட பஞ்சமி கவுரி பூஜைகள் நடந்தது. சின்னசேலம் ஆர்ய வைசிய சமூகத்தினர், மகிளா விபக், வனிதா கிளப் இணைந்து கருட பஞ்சமி, கவுரி பூஜை செய்தனர். நிகழ்ச்சியையொட்டி வாசவி பூங்காவில் 5 கிலோ மஞ்சள் தூளில் கவுரி அம்மன் பிரதிஷ்டை செய்து நாகர்சிலையுடன் பூஜைகள் செய்தனர். இந்த பூஜையின்போது சகோதர சகோதரிகள் நலன் வேண்டி, ஒருவொருக்குவர் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். கோவில் அர்ச் சகர் கணேஷ்சர்மா கருட பஞ்சமி கதை கூறி, மகாதீபாராதனை செய்து வைத்தார்.