ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவையொட்டி, இன்று புஷ்பயாகம் நடக்கிறது.இக்கோயிலில் ஜூலை 30ல் ஆடிப்பூரத்தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியில், வேதபிரான்பட்டர் சுதர்சனன் புராணம் படித்தார். நேற்று, தீர்த்தவாரி மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர்.கடைசி நாளான இன்று மாலை, வெள்ளிக்கிழமை குறடில் பல்வேறு மலர்களால் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் செய்துள்ளனர்.