குஜிலியம்பாறை : ஆர்.வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடியில், காவேரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. ஆடி.18 ஐ முன்னிட்டு நடந்த விழாவில், சுவாமி அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கோயில் நிர்வாகி முத்துப்பாண்டி, செயலாளர் சிவலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன், கோயில் பூசாரி காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.