மயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 3 :00 மணிக்கு கிராம பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு படையலிட்டனர். மாலை 6 :00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் குளக்கரை அருகில் தீமிதி விழாவும் நடந்தது. பக்தர்கள் வேண்டுதலுக்காக வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா நடந்தது.