பதிவு செய்த நாள்
05
ஆக
2014
12:08
தர்மபுரி: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள சூலினி ராஜ துர்க்காம்பிகை கோவிலில், ஆடி மூன்றாவது செவ்வாய் சிறப்பு பூஜை, இன்று நடக்கிறது. இதையொட்டி, காலை, 9 மணிக்கு கோட்டை முனியப்பன் ஸ்வாமி கோவிலிருந்து, பால்குடம் புறப்படுதல், 10.30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், கும்ப பூஜை, மஹா தீபாராதனையும், மதியம், 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 3.45 மணிக்கு, ராஜ துர்க்காம்பிகை சுயரூப காட்சியும், இரவு, 6 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், 9 மணிக்கு மஹா அபிஷேகமும், 11 மணிக்கு மஹா தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் செல்வமுத்துக்குமாரசாமி சிவாச்சாரியார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.காரிமங்கலம் அபிஜ குஜாம்பாள் அருணேஸ்வரர் கோவில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோவில், மந்தைவீதி மாரியம்மன் கோவில், தர்மபுரி நெசவாளர் நகர் சவுடேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை துர்க்கையம்மன் கோவில், மாரியம்மன் கோவில், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், ஆடி மூன்றாவது
செவ்வாயை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.