மண்டபம் : மண்டபம் முகாம் தென் கடற்கரை அய்யனார் கோயில் 58வது ஆண்டு எருது கட்டு விழா ஜூலை 28ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு கோயிலில் தினமும் சிறப்பு பூஜை நடந்தது. நேற்றிரவு 6 மணிக்கு சித்தி விநாயகர் மாரியம்மன் கோயிலில் இருந்து, அய்யனார் கோயிலுக்கு சுவாமி தேர்ப்பவனி வந்தார். இரவு 8 மணிக்கு எருது கட்டு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகி ரத்தினக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.