பதிவு செய்த நாள்
06
ஆக
2014
12:08
சென்னை : சட்டசபையில், நேற்று, இந்து அறநிலைய துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, ஒன்பது புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தூர் பாண்டியன் வெளியிட்டார்.அவற்றின் விவரம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், ஆகியவற்றில், ? கோடி ரூபாயில், நவீன இயந்திரம் மூலம், தரமான குங்குமம் தயாரித்து வழங்கப்படும்.கடலூர் மாவட்டம், வடலூர், அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், கோவை மாவட்டம்,
ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உட்பட, ஒன்பது கோவில்களில், 3.59 கோடி ரூபாய்
மதிப்பில், பக்தர்களுக்காக மண்டபம் கட்டப்படும்.பழநி கோவிலில், கூடுதல் மின் தேவையை
ஈடுசெய்ய, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 500 கிலோ வாட் திறன் கொண்ட, மின்மாற்றி அமைக்கப்படும்.ஓதுவார் பயிற்சிப் பள்ளியில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கோவில்களில், சம்பள விகித அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்படும்.திருப்போரூர் கந்த சுவாமி கோவிலுடன் இணைந்த, ஸ்ரீமத்சிதம்பர சுவாமிகள் திருமடம் மற்றும் எட்டு கோவில்களில், 1.15 கோடி ரூபாயில், சுற்றுச்சுவர் கட்டப்படும்.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், 1.01 கோடி ரூபாயில், அடிப்படை வசதிகள்மேம்படுத்தப்படும்.பழநி கோவில் கிரிவலப் பகுதியில், 38 லட்சம் ரூபாய் செலவில், வாகனம் நிறுத்துமிடத்தில்,தரைதளம் அமைக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.