மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி தென் பெண்ணைஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.