பதிவு செய்த நாள்
06
ஆக
2014
12:08
கரூர்: கரூர் அருகிலுள்ள ரங்கமலை கோவிலில், ஆடிப்பெருக்கு நாளில், அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில், ரங்கமலை உள்ளது. இந்த மலை மேல், மிகப்பழமை வாய்ந்த மல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கு நாளில், ஏராளமான பக்தர்கள் ரங்கமலையில் மல்லீஸ்வரரை தரிசிக்க குவிந்தனர். மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து விட்டு, பக்தர்கள் மலை ஏறத் தொடங்கினர். அடிவாரத்தில் இருந்து, மூன்று கி.மீ., தொலைவில் உள்ள மல்லீஸ்வரரை வணங்கிய பக்தர்கள், அங்கிருந்து, இரண்டு
கி.மீ., மலை உச்சியில் உள்ள கம்பத்து முனியப்பன் ஸ்வாமியை தரிசனம் செய்தனர். புதுமணத் தம்பதிகள் அதிகமானோர் இங்கு வந்திருந்தனர். ஆடிப்பெருக்கு நாளில், பக்தர்களுக்கு கோவில் நிர்வாகக் கமிட்டி சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.