பதிவு செய்த நாள்
06
ஆக
2014
12:08
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் அருகே, நடை பாதை அமைக்கும் பணியை, கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், கல்லணை கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. கல்லணை கால்வாய், 20 கண் பாலம் மற்றும் கோரிகுளம் பகுதிகளில், தூர்வாரும் பணிகளை, கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: கல்லணை கால்வாயில், 109 பணிகள், 5.32 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடியும் நிலையில் உள்ளது. பிரகதீஸ்வரர் கோவிலிருந்து, காந்திஜி சாலை இர்வின் பாலம் வரை கல்லணை கால்வாய் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி, 1.28 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க, பொது பணித்துறை அலுவலர்களுகு உத்தரவிடப்பட்டுள்ளது.கைப்பிடி சுவர், கிரில் அலங்கார மின்விளக்குகள், அமரும் இருக்கைகளுடன் நடைபாதை அமைக்கும் பணி விரைவாக
நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்ததும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு தெரிவித்தார். ஆய்வின் போது கல்லணை கால்வாய் செயற் பொறியாளர் கலியராஜ், உதவி செயற்பொறியாளர் மாதவன், உதவிப் பொறியாளர் கார்த்திகேயன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.