பதிவு செய்த நாள்
06
ஆக
2014
12:08
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, "1008 திருவிளக்கு பூஜை நடந்தது. முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், கீழச்சாக்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை, கண்டிலான், இளஞ்செம்பூர், ஒருவானேந்தல் உட்பட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, செல்லியம்மன் கோயில் நிர்வாக குழு கவுரவ தலைவர் பாலகுருசாமி, தலைவர் வடமலையான், உதவி தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் அகர்சாமி, பொருளாளர் பெருமாள் செய்திருந்தனர். முதுகுளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மாடசாமி, செல்வநாயகபுரம் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், நகர் வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் முத்துராமலிங்கம், செயலாளர் சண்முகம், ரவிச்சந்திரன் பலர் பங்கேற்றனர்.