திருப்புத்தூர் : திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில், ஆக.8ல் வரலெட்சுமி விரத திருமாங்கல்ய விளக்கு பூஜை நடக்கிறது.அன்று காலை 6 மணிக்கு தாயாருக்கு அபிஷேகமும், காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு மகா சுதர்ஸன ஹோமம் நடைபெறும். மாலை 5 மணிக்கு, வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு, திருமாங்கல்ய விளக்கு பூஜையும் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு, பெருமாள் திருவீதி வலம் வருவார். பூஜையில் பங்கேற்க விரும்புபவர்கள் கோயிலில்முன்பதிவு செய்யலாம்.