பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
கும்பகோணம்: மகாமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, துவங்கியது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், மகாமக திருவிழா, 2016ம் ஆண்டு, கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருஙண்கிணைப்புக்குழு கூட்டம், இரண்டு முறை நடந்தது. அதில், எடுத்த முடிவின்படி, கும்பகோணம் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், கும்பகோணம் அருகேயுள்ள செட்டி மண்டபத்திலிருந்து தாராசுரம் வரை, ஐந்து கி.மீ தூரத்திற்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, துவங்கியது. அப்பணியின் போது, வணிகர்கள் பலர், கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். சில இடங்களில் பொக்லீன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது.
தொடர்புடைய கோயில்கள் :