பழநி : பழநிகோயில் நிர்வாகத்திற்குபட்ட மாரியம்மன்கோயிலுக்கு புதியதேர் செய்யும் பணி நடக்கிறது. பழநி கிழக்குரதவீதியிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு, வெள்ளி கிழமைகள் மற்றும் விழாக்காலங்களில், உள்ளூர்,வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலுக்கு என தனியாக தேர் இல்லாத காரணத்தால், மாசிமாத மாரியம்மன் கோயில் தேரோட்டத்திற்கு, பெரியநாயகியம்மன்கோயில் தேர் பயன்படுத்துகின்றனர். மாரியம்மன் கோயிலுக்கு தனியாக, புதியத்தேர் ரூ.18லட்சம் செலவில், 14.3 அடிஉயரம், 9.8அடி நீளம் கொண்டதேர் சாஸ்திர விதிமுறைகளின்படி, வடிவமைக்கும்பணி நடக்கிறது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்தபதிகள் நாகமுத்து, பரத் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர். ஓரிரு மாதத்தில் பணிகள்முடிந்து, வரும் மாசித்திருவிழாவில் புதுத்தேர் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.