காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் உள்ள சாமாத்தம்மன், மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் சாமாத்தம்மன் கோவிலில் கடந்த, 3ம் தேதி, ஆடி திருவிழா துவங்கியது. முதல் நாள் கிராமத்து பெண்கள் சாமாத்தம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்டனர்.நேற்று முன்தினம் மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை அங்குள்ள மாரியம்மன் கோவிலிருந்து மாலை பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தி டிராக்டர், வேன் போன்றவற்றை இழுத்து சென்றனர். இந்த ஊர்வலம் தெருக்களை சுற்றி மீண்டும் கோவிலைசென்றடைந்தது. இதனை தொடர்ந்து இரவு மாரியம்மனுக்கு பக்தர்கள், அலகு குத்தி தொங்கியவாறு மாலை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, அர்ஜுனனுக்கும் திரவுபதி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் சுவாமி வீதியுலா நடந்தது.