பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
பவானி: பவானி, ஜம்பை, சீதபாளையம் பவானி நதிகரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபெரியாண்டவர், ஸ்ரீபெரியாண்டிச்சி, பேச்சியம்மன், சடைச்சியம்மன், சீரங்காயம்மாள் கோவில் ஆடிதிருவிழா நடந்தது. நேற்று காலை, சின்னமோளபாளையத்தில் உள்ள மடபள்ளியில் இருந்து புறப்பட்டு, சீதபாளையம் கோவிலுக்கு வந்து, கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. பின், சின்னமோளபாளையம், பவானி ஆற்றுக்கு சென்று, தீர்த்த குட ஊர்வலத்தின் போது, பூங்கரகம் எடுத்து வந்த கோவில் பூசாரி நாச்சிமுத்து, ஆட்டின் ரத்தம் கு டிக்கும் நிகழ்ச்சி நடந்தது.மதியம் கோவிலில், பக்தர்கள் பொங்கல் வைத்து, நேர்த்தி கடன் செலுத்தினர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.