பதிவு செய்த நாள்
08
ஆக
2014
10:08
சேலம்: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சேலத்தில் நோன்பு கயிறு மற்றும், படையல் பொருட்கள், விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி, பெண்கள் ஆண்டுதோறும், ஆடி மாதத்தில், வரலட்சுமி நோன்பு இருப்பது வழக்கமாகும். நோன்பை முன்னிட்டு, கோவிலுக்கு, படையல் பொருள் வாழை, தேங்காயுடன், மங்கள பொருளான குங்குமம் மற்றும், வரலட்சுமி நோன்பு கயிறு ஆகியவற்றை, அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு நடத்துவர். நோன்பு கயிரை கோவிலில், பெண்கள் தங்கள் கையில் கட்டி கொண்டு, கணவனிடம் ஆசி பெறுவர். சக பெண்களுக்கு, நோன்பு கயிறு, தாலி கயிறு, வளையல், தாம்பூழம் கொடுத்து, ஆசி பெறுவர். இன்று வரலட்சுமி நோன்பு நாளாகும். அதை முன்னிட்டு, சேலம் ராஜகணபதி கோவில் அருகில், நோன்பு கயிறு, வாழைக்கன்று, மாவிலை, பூ ஆகியவை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. நோன்பு கயிறு, ஐந்து ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை, விற்பனையானது.