பதிவு செய்த நாள்
08
ஆக
2014
01:08
அந்தியூர்: அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் குருநாத ஸ்வாமி கோவில், ஆடிப்பெரும் தேர்திருவிழா, குதிரை மற்றும் மாட்டுச்சந்தையுடன் வரும், 13ம் தேதி நடக்க உள் ளது.தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவுக்கு, தமிழகம் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட, பல இடங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வருகை புரிவார்கள். இதை முன்னிட்டு, புதுப்பாளையத்தில் இருந்து, மாட்டுச்சந்தை செல்லும் வழியில், வெகு தூரத்துக்கு ரோட்டின் இரு புறமும், கடைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தீப்பிடிக்காத வகையிலும், போக்குவரத்துக்கும், மக்கள் நடமாட்டத்துக்கும் இடையூறு இல்லாத வகையில், இக்கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும், இரண்டு நாட்களில், இப்பகுதி களை கட்டத்துவங்கும்.