பதிவு செய்த நாள்
08
ஆக
2014
01:08
ஆத்தூர்: ஆத்தூர் பெரியநாயகி, பச்சையம்மன் கோவில் திருவிழாவையொட்டி, யானை, குதிரை, பசுவுடன், பக்தர்கள் ஊர்வலமாக சென்று, ஸ்வாமிக்கு பூஜை செய்தனர். ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில், பெரியநாயகி, பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மஹா சண்டி யாக பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை, 11 மணியளவில், திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து, யானை, குதிரை, பசுவுடன், பச்சை அம்மன் ஸ்வாமிக்கு, சீர் வரிசைகள் எடுத்துக் கொண்டு, முக்கிய வீதி வழியாக, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஸ்ரீரங்கம் பெரிய கோவில் அர்ச்சகர் ரங்கராஜ பட்டர் குழுவினர், கோவிலில் சண்டி தேவிக்கு, மஹாத்மிய பாராயணம், நவாஷரி ஜபம், சக்தி அர்ச்சனை, மகா தீபாராதனை, யோகினி மற்றும் பைரவ பலி பூஜைகள் நடந்தது. ஊர்வலத்தில், திரைப்பட நடிகர் ராதாரவி, நடிகை நளினி மற்றும் விழா குழுவினர் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* ஆத்தூர் அருகே, கீரிப்பட்டி பேரூராட்சி, ஆறாவது வார்டு, மகா மாரியம்மன் கோவிலில், ஜுலை, 29ம் தேதி முதல், ஆடித் திருவிழா நடந்து வருகிறது. நேற்று, பூங்கரகம், அக்னி சட்டி எடுத்தல், பால் குடம், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர்.