ஓமலூர்: ஓமலூர் அருகே, கருப்பூரில், தேவி கருமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, 15 நாட்களுக்கு முன், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும், பூங்கரகம், அக்னி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மதியம், பக்தர்கள் பொங்கலிட்டு, ஆடு, கோழிகளை பழியிட்டு வழிபட்டனர். மாலையில் அலகு குத்தும் நிகழ்ச்சியும், இரவில் வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.