பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக் கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பொள்ளாச்சி அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.