பதிவு செய்த நாள்
09
ஆக
2014
11:08
வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. ஆடிமாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 6.00 மணிக்கு கணபதி பூஜையும், 7.00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு அபிேஷக பூஜையும், 7.15 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல், வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், காமராஜ்நகர் சக்தி மாரியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில், ஈட்டியார் கருமாரியம்மன் கோவில், சோலையார்டேம் சக்திமாரியம்மன் கோவில், முத்துமுடி எஸ்டேட் முத்துமாரியம்மன் கோவில், கவர்க்கல் எஸ்டேட் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்புடைய கோயில்கள் :