பதிவு செய்த நாள்
09
ஆக
2014
02:08
ஓசூர்: ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாருதி நகரில், சக்தி வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் உற்சவ விழா, கடந்த, 31ம் தேதி துவங்கியது. 31ம் தேதி காலை 8 மணிக்கு, அம்மனை ஆற்றில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கொடிமரபூஜை, காப்பு கட்டுதல், சக்தி பூஜை ஆகிய நிகழ்ச்சியும் நடந்தது. 1ம் தேதி முதல், 6 ம் தேதி வரை தினமும் காலை, 5.30 மணிக்கு விசேஷ அபிஷேக பூஜை, மாலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடந்தது. கடந்த 7ம் தேதி காலை 9.15 மணிக்கு, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, முத்து மாரியம்மன் கோவிலுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு, மாருதி நகர், கலைஞர் நகர், கிருஷ்ணாநகர், அண்ணாமலை நகர், சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி வழியாக அம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை, 2.30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துர்கா ஹோமம் நடந்தது. தொடர்ந்து, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, முத்து மாரியம்மன் கோவிலுக்கு சக்தி கரகம், பால்குடம், அலகு குத்துதல், அக்னிகரகம் ஆகியவை எடுத்து வரப்பட்டது. 10 ம் தேதி காலை, 6 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மனை ஆற்றிற்கு அழைத்து செல்லுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.