பதிவு செய்த நாள்
09
ஆக
2014
02:08
கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், கடந்த 29 ஆண்டாக பல ஆன்மிகக் காரியம், சமூக சேவைகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆடி மாதம் முழுவதும் சிறப்பு ஹோமம், அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஆடி மாதம் முழுவதும் 5 வெள்ளிக்கிழமைகளிலும் காலை முதல் கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன் அமைந்துள்ள ஐயப்பன், பஞ்சமாதா, மகாலட்சுமி, விநாயகர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம் நடந்தது. நேற்று 8ம் தேதி வெள்ளி அன்று வரலட்சுமி நோன்பும் சேர்ந்து வந்ததால், பெண்களுக்கான சிறப்பு பூஜை, முரளி சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. 11 திரவியத்துடன் சிறப்பு ஹோமம், அபிஷேகம் தொடர்ந்து லட்சார்ச்சனை நடந்தது. விழாவில், சங்கத்தலைவர் கனகசபாபதி, செயலாளர் மோகன், பொருளாளர் சிவசங்கர், பி.ஏ.பி., எக்ஸ்போர்ட் ரவி ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் பசுபதீஸ்வரர் ஐயப்ப சேவா சங்க நிர்வாகி கோபால் செய்திருந்தார்.