பதிவு செய்த நாள்
09
ஆக
2014
02:08
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த, பெண்ணேஸ்வரர் மடம், வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் ஆடி நான்காவது வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
* காவேரிப்பட்டணம் அடுத்த, அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி நான்காவது வெள்ளி, வரலட்சுமி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
* காரிமங்கலம் அபித குஜாம்பாள் அருணேஸ்வரர் கோவில், வெள்ளையன் கொட்டாவூர் மாரியம்மன் கோவில், மந்தைவீதி மகாதி மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவில், துர்க்கையம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., அங்காளம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.