புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், ரிக் மற்றும் யஜூர் வேதத்தினர் பூணுால் மாற்றிக்கொள்ளும் ஆவணி அவிட்ட வைபவம் நடந்தது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், வேத சாம்ராட் ராஜா சாஸ்திரிகள் தலைமையில், ரிக் மற்றும் யஜூர் வேத ஆவணி அவிட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.காலை 5:00 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி, மதியம் 12:௦௦ மணி வரை நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பூணுால் மாற்றிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது.ஏராளமானோர் கலந்து கொண்டு பூணுால் மாற்றிக்கொண்டனர். இன்று (11ம் தேதி) காலை 5:00 மணி முதல் 7:00 வரை காயத்ரி ஜபம் நடக்கிறது.