பதிவு செய்த நாள்
11
ஆக
2014
02:08
தேவகோட்டை : தேவகோட்டையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடி திருவிழாவை முன்னிட்டு, நேற்று 5004 கஞ்சி கலயங்கள் ஏந்தி,பெண்கள் நேர்த்தி செலுத்தினர். மூன்று நாட்கள் நடந்த விழாவின், முதல்நாள் நிகழ்ச்சியில், மன்ற தலைவி பெரியநாயகி தலைமையில், கலசம், விளக்கு, வேள்வி பூஜை நடந்தது. டாக்டர் ராஜ்மாதவமூர்த்தி துவக்கி வைத்தார். 2ம் நாளில் மன்ற செயலாளர் வசந்தா முன்னிலையில் அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. பாண்டியன் துவக்கி வைத்தார். நேற்று, பொருளாளர் கலா தலைமையில், நகர சிவன் கோயிலில் இருந்து 5004 பெண்கள் கஞ்சி கலயங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.