பதிவு செய்த நாள்
12
ஆக
2014
12:08
மணலி: மணலியில், தில்லைபுரம் மாரியம்மன் கோவிலில், தில்லைபுரம் கிராம முன்னேற்ற சங்கம் சார்பில், 43ம் ஆண்டு ஆடி மாதம், நான்காம் வார கூழ்வார்த்தல் திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதையொட்டி, கடந்த 8ம் தேதி பெரியதோப்பு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கலசம் ஊர்வலமாக, கோவிலை வந்தடைந்தது. நேற்று முன்தினம், மணலி ஜலகண்ட மாரியம்மன் கோவிலில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடங்களை தலையில் சுமந்து, பாடலசாலை வழியாக, கோவிலை வந்தடைந்தனர். பின், மாரியம்மனுக்கு பாலாபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், வண்ண மலர்களால், அலங்கரித்த அம்மன், திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.