திருத்தணி: ஆடி திருவிழாவை முன்னிட்டு, காளியம்மன் கோவிலில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி அடுத்த, அரு ங்குளம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில், நேற்று ஆடி திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, திரளான கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் வந்து அருள்பாலித்தார்.