கம்மாபுரம்: ஊ.மங்கலம், திரவுபதியம்மன் கோவில், ஆடித் திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். கம்மாபுரம் அடுத்த ஊ.மங்கலம், எலுமிச்சை திரவுபதியம்மன் கோவில், ஆடி திருவிழா, கடந்த 8ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 9ம் தேதி காலை 7:00 மணிக்கு மூலவருக்கு 108 அபிஷேக ஆராதனை, காலை 9:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், பகல் 2:00 மணி யளவில் ஏராளமான பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபமேற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம் (10ம் தேதி) காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.