விருத்தாசலம்: விருத்தாசலம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவில், திருவிளக்கு பூஜை நடந்தது. விருத்தாசலம் பெரியார் நகர், டிரைவர் குடியிருப்பு ஆதிசக்தி விநாயகர், செல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் உற்சவமாக, நேற்று முன்தினம் மாலை திரு விளக்கு பூஜை நடந்தது. 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு ஏற்றி, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, கிருஷ்ணர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நாளை (15ம் தேதி) காலை செடல் உற்சவம் நடக்கிறது. 16ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மாலை ஊஞ்சல் உற்சவம், 17ம் தேதி கஞ்சி வார்த்தல், இரவு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.