கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தில் உள்ள சூலப்பிடாரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. கடையம், சி.என்.பாளையம்,சித்தரசூர் கிராமங்களுக்கு பொதுவான சூலப்பிடாரி அம்மன் விக்கிரகம் சித்தரசூர் கோவில் கிணற்றிலிருந்து எடுத்து கடையம் முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். முத்து மாரியம்மன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுமார் 60 அடி உயரமுள்ள தேரில் அம்மன் ஊர்வலம் நடந்தது. இத்தேரை கடையம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 இளைஞர்கள் சுமந்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய தேர் திருவிழாவில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் லட்சுமி கோதண்டராமன், தர்மகர்த்தா பாண்டுரங்கன் செய்தனர்.