பதிவு செய்த நாள்
16
ஆக
2014
12:08
பொள்ளாச்சி :பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட அலங்கார பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில், நின்று அம்மனை தரிசித்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கோவில்களில் அன்னதானம்:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சுதந்திர தின விழாவையொட்டி, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி, அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், கோவில் பரம்பரை அறங்காவலர் உதவியாளர் சண்முகவேல், செயல் அலுவலர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், நடந்த விழாவில், மாவட்ட ஆய்வுக்குழுமம் மற்றும் கவுன்சிலர் நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், செயல்அலுவலர் வெண்மணி மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.