புதுச்சேரி:வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக்கூடத்தில் ஆறாம் ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக்கூடத்தில் ஆறாம் ஆண்டு பிரதிஷ்டா தின மகோற்சவம் மற்றும் 51ம் ஆண்டு ஜெயந்தி உறியடி உற்சவம் நேற்று துவங்கியது.விழாவையொட்டி, நேற்று காலை 8 மணிக்கு மகா சுதர்சன ஹோமமும், கனகாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாளை 17 ம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திவ்ய நாம பஜனை நடக்கிறது.வரும் 23ம் தேதி மாலை 7 மணிக்கு உறியடி உற்சவமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை வேங்கடாசலபதி பஜனைக்கூடத்தினர் செய்துள்ளனர்.