பதிவு செய்த நாள்
18
ஆக
2014
01:08
நகரி : நகரி தேசம்மன் கோவில் உண்டியலில், 3.36 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில், கண்ணொளி வழங்கும் தேசம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த ஆடி மாதத்தில் நடந்த நான்கு வார ஆடித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் அம்மனை வழிபட்டனர்.மேலும், பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, அங்குள்ள உண்டியலில், பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தினர்.நேற்று முன்தினம், கோவில் நிர்வாகஅதிகாரி முனிகிருஷ்ணய்யா முன்னிலையில், ஊழியர்கள் உண்டியல்களை திறந்து, பணம், நகை, வெள்ளி பொருட்களை தனித்தனியாக பிரித்து எண்ணினர். இதில், 3.36 லட்சம் ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கம் மற்றும், 33 கிராம் வெள்ளி ஆகியவை கோவிலுக்கு வருவாய் கிடைத்து உள்ளது. இன்னும், மூன்று வாரங்கள் ஆடித்திருவிழா கொண்டாடப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.