பதிவு செய்த நாள்
19
ஆக
2014
12:08
துறையூர் :துறையூர் அடுத்த கீரம்பூரில், கிருத்திகை விழாவையொட்டி, 500 பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.கீரம்பூரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய ஸ்வாமிக்கு, தைப்பூசம், கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று நடந்த கிருத்திகை விழாவையொட்டி, கீரம்பூர் முருகன் கோவிலுக்கு, செல்லாண்டியம்மன் கோவில் நந்தவனத்திலிருந்து, 500 பேர் பால்குடம் எடுத்து, கோட்டை வீதி வழியாக ஊர்வலமாக வந்தடைந்தனர். தொடர்ந்து, அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ஸ்வாமி திருவிதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.