அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்ற பக்தர்கள் இமயமலை பயணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2014 11:08
வடலூர்: இமயமலையில் 10வது ஆண்டாக அருட்பெருஞ் ஜோதி மகா தீபம் ஏற்ற பக்தர்கள் இமயமலைக்குச் சென்றனர். வடலூரில் வள்ளலார் கோட்டம் ஞானானந்த சுவாமிகள் தலைமையில் செயல்பட்டு வருகிறது. வள்ளலாரின் கொள்கையைப் பரப்பும் வகையில் ஆண்டு தோறும் இமய மலையில் உள்ள ஜோதி பர்வதம் மலையில் உள்ள வள்ளலாருக்கு கோவில் அமைத்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி மகா ஞான தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10வது ஆண்டாக தீபம் ஏற்றும் பயணம் தொடக்க நிகழ்ச்சி வடலூர் சபையில் துவங்கியது. இந் நிகழ்ச்சியில் இமயமலை செல்லும் பக்தர்கள் ஞான சபையில் சிறப்பு வழிபாடு நடத்தி ஞானானந்த சுவாமிகள் தலைமையில் பயணத்திற்கு புறப் பட்டனர். இக்குழுவினர் சென்னையில் இருந்து விமானம் முலம் டில்லி சென்று அங்கிருந்து ரிஷிகேஷ், அரித்துவார், மகரிஷிகுகை, அத்தரி மகரிஷி பர்வதம் சென்று இமயமலையில் உள்ள ஜோதி பர்வதம் மலையில் அருட்பெருஞ்ஜோதி மகா ஞான தீபம் ஏற்றுகிறது. இக்குழுவை குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ,. ராஜேந்திரன், டி.ஆர்.எம்., கல்வி அறக்கட்டளைத் தலைவர் ராஜமாரியப்பன், மலேஷியா எம்.பி., குணபாலன், கோவை செல்வம், நெ ய்வேலி ஆனந்தன், உட்பட பலர் கலந்து கொண்டு வழியனுப்பினர்.