சிதம்பரம்: சிதம்பரம் பெரியார் தெரு ராமானுஜர் மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி இசைக்குழு சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நான்கு நாட்கள் நடந்தது. சிதம்பரம் கிருஷ்ண ஜெயந்தி இசைக் குழு சார்பில் கிருஷ்ண ஜெயந்தி 98ம் ஆண்டு விழா பெரியார் தெரு ஸ்ரீமத் ராமானுஜ பஜனை மடத்தில் கடந்த 16ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. விழாவிற்கு கிருஷ்ண ஜெயந்திக் குழு தலைவர் சங்கீத கலைஞானி வெங்கடரத்தினம் தலைமை தா ங்கினார். முதல் நாள் நிகழ்ச்சி சிதம்பரம் தண்டபாணி, சங்கீதா குழுவினரின் மங்கல இசையுடன் துவங்கியது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கிரு ஷ்ணர் பெரியார் தெரு கூத்தாடும் பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக, பஜனை பாடியும், சிவகாமி மகளிர் மன்றம் கோலாட்டம் மற்றும் ÷ மளதாளங்கள், வாண வேடிக்கையுடன் ராமானுஜர் மடத்தில் எழுந்தருளினார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரிய ர்கள் ரங்காச்சாரி, ஆனந்த நடராஜ தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், தொழிலதிபர்கள் ராமநாதன், நவநீதன், சங்கரன், தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் சீனு என்கிற ராமதாஸ் பங்கேற்றனர்.