ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு கோயில் உண்டியல் மூலம் ரூ. 7 லட்சம் வருமானம் கிடைத்தது. ஒரு மாதத்திற்கு பிறகு இக்கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், ரொக்கம் 6 லட்சத்து 98 ஆயிரத்து 496 ரூபாய், 52 கிராம் தங்கம், 8 கிலோ மற்றும் 470 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாத்துரை, கமலநாதன், கண்ணன் மற்றும் கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.