வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த அயக்காரன்புலம் முதலியார் குத்தகையில் உள்ள, ராதா ருக்மணி சமேத கிருஷ்ண மட ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா நடந்தது. ராதா ருக்மணி திருக்கல்யாணத்தையொட்டி, கிராம மக்கள் கேரள செண்டா மேளத்துடன், பரிசப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, கோவிலில் சிறப்பு சுதர்சன ஹோமமும், ராதா- ருக்மணி -கிருஷ்ண பகவானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தோப்புத்துறையில் உள்ள, கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி சிறப்பு அபிஷேகமும், தீபாரதணையும் நடந்தது. பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர்.