பதிவு செய்த நாள்
20
ஆக
2014
01:08
திருவாரூர்: திருவாரூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நடந்த ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர், மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி சித்தர் சக்தி பீடத்தில், 10ம் ஆண்டு ஆடிபூர விழா நடந்தது. காலை, 6 மணியளவில் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள ஆரூரான் திருமண மண்டபத்திலிருந்து துவங்கிய, ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலத்தை மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் வாசன் துவக்கி வைத்தார். கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலம் சென்று, பிடாரி கோவில் தெருவில் உள்ள சக்தி பீடத்தினை அடைந்தது. தொடர்ந்து, கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் சக்தி பீடத்தின் கருவறைக்குள் சென்று, பால் அபிஷேகம் செய்தனர்.