பதிவு செய்த நாள்
21
ஆக
2014
01:08
குமாரபாளையம்: நவசக்தி விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். குமாரபாளையம் அருகே, தட்டாங்குட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த் நகரில், புதிதாக கட்டப்பட்ட நவசக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, கும்ப அலங்காரம், முதல் கால யாகவேள்வி, கோபுர கலசம் வைத்தல், நேற்று அதிகாலை, 4 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வி, கடம் புறப்பாடு, காலை, 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. தட்டாங்குட்டை பஞ்சாயத்து தலைவர் செல்லமுத்து, யூனியன் கவுன்சிலர் மணிசெல்வம், முன்னாள் தலைவர் காந்தி, வார்டு உறுப்பினர் சின்னராமன் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.