பதிவு செய்த நாள்
21
ஆக
2014
01:08
ஈரோடு: வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு, காவிரிக்கரை வனபத்ரகாளியம்மன் கோவிலில், சப்த கன்னிமார், பஞ்சமுக நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, 19ம் தேதி கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகபூஜைகள் நடந்தது. நேற்று காலை, பத்து மணிக்கு பஞ்சமுக நாகாத்தம்மன், சப்த கன்னிமார்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா அபிஷேகம், தசதரிசனம், தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தது. கும்பாபிஷேகத்தை சுந்தரேசன், சிவானந்தசிவம் ஆகியோர் நடத்தி வைத்தனர். இன்று முதல், 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது.